சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் - போலீஸ் விசாரணை
சென்னை: சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்தன.
தேமுதிக தலைமை அலுவலகம் சென்னை கோயம்பேட்டியில் இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அலுவலக் கட்டிடத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, மக்கள் நலக்கூட்டணியுடன் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்தது தொடர்பாக அக்கட்சித் தலைவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேமுதிக, திமுகவுடன் கூட்டணி வைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்திரகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினர். பின்னர் அவர்கள் தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் இணைந்தனர்.
இந்த சூழ்நிலையில் தேமுதிக அலுவலகம் மீது மர்மநபர்கள் நடத்திய கல்வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications