குடிநீர் பஞ்சத்தைப் போக்க கல்குவாரி நீர்.. குடிக்க உகந்ததா.. கிங் இன்டியூட்டில் நடக்கிறது ஆய்வு
சென்னையில் உருவாகியுள்ள குடிநீர் பஞ்சத்தைப் போக்க கல்குவாரி நீரை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் நீர் குடிக்க ஏற்றதா என ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை: குடிநீர் பஞ்சத்தால் சென்னை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கோடை காலத்தில் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் நீரை குடிநீராக பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என எதுவும் தமிழகத்தின் நீருக்கு கைகொடுக்கவில்லை. விவசாயம் பொய்த்துப் போய் விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர்.

மறுபுறம், குடிநீருக்கான நீர் இல்லாமல் தமிழகம் முழுவதும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கலர் கலர் குடங்களை சுமந்து பெண்கள் சாலைகளில் அலைந்து திரிந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
குடிநீர் ஆதாரம்..
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகள்தான் தீர்த்து வைக்கும். இது தவிர வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் கிடைத்து வருகிறது.
வற்றி வரும் ஏரிகள்..
இந்நிலையில், கொளுத்தி வரும் வெயிலுக்கு ஏரிகளில் தண்ணீர் கடகடவென வற்றி வருகிறது. சென்னைக்கு தண்ணீர் வழங்க 1.678 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் ஒரு மாதம் கூட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
கல்குவாரி நீர்
இந்நிலையில் கல்குவாரி குட்டைகளில் தேங்கி உள்ள நீரை சென்னை மக்களுக்கு வழங்க அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதாவது கல்குவாரியில் தேங்கி இருக்கும் நீரை சுத்திகரித்து பின்னர் குடிநீராக விநியோகிக்கப்படும்.
குடிக்க முடியுமா?
கல்குவாரியில் தேங்கி இருக்கும் நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய பொறியாளர்களுக்கு குடிநீர் வாரிய இயக்குனர் அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு
இதையடுத்து கல்குவாரிகளில் தேங்கி இருக்கும் நீரை குடிநீருக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்த ஆய்வுகளை சென்னை குடிநீர் வாரிய பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரின் அளவு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எத்தனை கல்குவாரிகளில் நீர்?
சென்னையை அடுத்துள்ள மாங்காட்டில் 22 கல்குவாரிகளும், திருநீர்மலையில் 3 கல்குவாரிகளும், பம்மலில் 3 கல்குவாரிகளும், நன்மங்கலத்தில் 3 கல்குவாரிகளும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த குவாரிகளில் உள்ள நீரின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றன.
கிங் இன்ஸ்டியூட்டில்..
கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் நீரின் தரம் பற்றிய ஆய்வை சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மற்றும் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் புவி அமைப்பியல் துறை ஆய்வு செய்து வருகிறது. மேலும் நீரின் இருப்பு குறித்து எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, சிவில் பொறியியல் துறையும் ஆய்வு செய்து வருகின்றது.
என்ன நடக்கப் போகுதோ...
கல்குவாரிகளிலுள்ள நீரை பயன்படுத்தலாமா கூடாதா என்பது ஆய்வு முடிந்த உடன் தெரிய வரும். நீரை பயன்படுத்தலாம் என்றால் குவாரி நீரை சென்னை மக்களுக்கு அரசு விநியோகம் செய்யும். ஆனால் அந்த நீரை பருகிய பின்னர்தான் சென்னை மக்களுக்கு என்ன விதமான தீங்கை விளைவிக்கும் என்பது தெரிய வரும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications