பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் இனிமேல் பிச்சை எடுக்க முடியாது பாஸ்...!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எழில்முருகன் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாடு பிச்சை எடுப்பு தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்த தலைமை செயலாளர், உள் துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
இதே கோரிக்கைகளை கொண்ட மனு கடந்த 2006-ம் ஆண்டு இந்த கோர்ட்டில் தொடரப்பட்டது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சாலைகளில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள், குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். பிச்சைக்காரர்கள் (ஜனத்) தொகையை பொறுத்து, மாவட்டத்துக்கு ஒரு பிச்சைக்காரர்கள் காப்பகம் கட்டப்படுகிறது.
இதற்காக 70 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்கள், வழிபாட்டு தலங்களில் பிச்சை எடுப்பவர்களை பிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் அவர்களை முகாம்களில் அடைத்து வருகிறோம்.
பிச்சை எடுப்பதை தடுக்கும் அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டு இருந்தது.
எனவே இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில், தகுந்த நடவடிக்கையை பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications