தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு.. மீண்டும் பதற்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் மர்ம நபர்கள் அரசுப் பேருந்துக்கு தீ வைத்ததால் பதற்றம் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

மெல்ல திரும்பும் இயல்பு நிலை
மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் அங்கு இன்று முதல் இயல்பு நிலை மெல்ல திரும்புகிறது.

நெல்லை சென்ற பேருந்துக்கு தீ
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடன்குடியில் இருந்து நெல்லை செல்லம் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்
குறைந்த அளவில் பயணிகள் இருந்த நிலையில் அங்கு வந்த சிலர் பெட்ரோலை ஊற்றி பேருந்திற்கு தீ வைத்துள்ளனர். அப்போது அவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் பதற்றம்
பேருந்து கொழுந்து விட்டு எரிவதை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications