கட்சிக்காரர், எம்.எல்.ஏ என்றெல்லாம் பார்க்க மாட்டோம்..யாராக இருந்தாலும் கடும் தண்டனை! எவ வேலு உறுதி!
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய விற்பனை விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை உறுதி என்றும், கட்சிக்காரர், எம்.எல்.ஏ என்றெல்லாம் பார்க்க மாட்டோம் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் பலருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். தற்போது வரை இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராய மரண விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் துரிதம் காட்டி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல்: இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று காலை அவசர ஆலோசனை நடத்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், அமைச்சர்களை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைத்தார். முதல்வரின் ஆலோசனைப்படி, கள்ளக்குறிச்சி சென்று கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து உயிரிழந்தோரின் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ. வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
எவ வேலு பேட்டி: பின்னர், அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "கள்ளச்சாராய நிகழ்வை நாங்கள் நியாயப்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சட்டம் - ஒழுங்கு குறித்து வாரந்தோறும் காவல் அதிகாரிகள், ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்கிறார். இந்த விவகாரத்தில் அரசு சீரிய வேகத்தில் நடவடிக்கை எடுத்துவருகிறது. காவல்துறை அதிகாரிகள் மீது தவறு இருப்பதன் காரணமாகவே மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மட்டுமின்றி துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என இச்சம்பவம் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடும் நடவடிக்கை உறுதி: இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆய்வு செய்து 2 நாளில் அறிக்கை அளிக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விஷச் சாராயம் குடித்த 132 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 27 பேர் குடும்பத்துக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷச் சாராய விற்பனை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
யார் தவறு செய்திருந்தாலும்: தற்போது விஷச் சாராயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கிறோம். சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்படும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். சட்டத்திற்கு முன்பு அனைவரும் ஒன்று தான். கட்சிக்காரர், எம்.எல்.ஏக்கள் என யார் தவறு செய்து இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் உள்ளன. விஷச் சாராய விவகாரத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அரசு அமைத்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கடும் சட்டங்களை முதலமைச்சர் இயற்றுவார்." என்று தெரிவித்தார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications