இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு
இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் சரிந்து கீழே விழுந்ததில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜகர்தா: இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவிற்கு வடக்கே சுமத்ரா தீவிலிருந்து 130 கி.மீ தொலைவில் சிக்ளி என்ற பகுதியை மையமாக கொண்டு ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கதால் கட்டடங்கள் சரிந்து கீழே விழுந்ததில் முதல்கட்டமாக சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியது. தற்போது உயிரிழப்பின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உருவான சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை வரை தாக்கியதில் பல லட்சம் பேரை காவு கொண்டது. சுனாமி பேரலைகளை ஏற்படுத்திய பாதிப்பு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் மறக்க முடியாத நினைவுகளாக உள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் 18 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தநிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயருமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications