சைதையில் பாட்டி முதல் பேத்தி வரை குறிவைக்கும் பொன்னையன்- வெற்றி பிரகாசமாம்
சென்னை: சைதாப்பேட்டை தொகுதியில் பேத்தி முதல் பாட்டி வரை ஒருவரை விடாமல் கவர் செய்து வருகிறார் அதிமுக வேட்பாளர் பொன்னையன். சிறு குழந்தைகளுக்கு அம்மா தொப்பி கொடுத்தும் முதியவர்களுக்கு இரட்டை இலை விசிறி கொடுத்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார். சைதை தொகுதியில் தமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார் சி. பொன்னையன், சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கங்கையம்மன் கோயில் தெரு, ஆர்.வி.நகர், ராகவரெட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் சி. பொன்னையன், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அதிமுகவின் சாதனைகளை விளக்கம் துண்டு பிரசுரங்களைக் கொடுத்தும் வாக்கு சேகரிக்கும் பொன்னையன், அதிகம் குறிவைப்பது மகளிரைத்தான்.

வெற்றி பிரகாசம்
அதிமுகவின் அமைப்புச் செயலாளர் என்ற உயரிய பொறுப்பில் இருக்கும் தமக்கும் எல்லாத் தொகுதியுமே, சொந்தத் தொகுதி தான் என்று கூறி வரும் பொன்னையன், அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார்.

நிதியமைச்சர் பொன்னையன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, ஒடுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொன்னையன், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலகட்டத்தில், திருச்செங்கோடு தொகுதியில் மூன்று முறை வெற்றிப்பெற்றார். அதன்பின், கடந்த, 2001ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் வெற்றிப்பெற்று, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், நிதியமைச்சராக இருந்தார்.

கட்சியில் முக்கியத்துவம்
நீண்ட காலம் கட்சியில் எந்த ஈடுபாடும் இன்றி ஒதுங்கியே இருந்த பொன்னையன், கடந்த இரண்டு மாதத்திற்கு முன், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். இதற்கிடையே, கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

சைதையில் வாக்கு சேகரிப்பு
இந்நிலையில், சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட பொன்னையனுக்கு சீட் வழக்கப்பட்டுள்ளது. கடந்த, 2001க்கு பின், தற்போது தேர்தலை சந்திக்கவுள்ள பொன்னையன், வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நம்பிக்கை ஜெயிக்குமா
பாட்டி முதல் பேத்திவரை குறிவைத்து சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் வாக்கு வேட்டையாடும் பொன்னையன், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார். பொன்னையனின் நம்பிக்கை ஜெயிக்குமா பார்க்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications