டிபன் பாக்ஸை கழுவி தர மறுத்த மாணவனை ஆள் வைத்து அடித்த ஆசிரியர்
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி சமத்துவபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் மனோஜ்குமார். சமத்துவபுரம் அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியின் ஆசிரியர் முருகன் தனது டிபன் பாக்சை சுத்தம் செய்து தரும்படி மனோஜ்குமாரிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து இதே வேலை செய்து வந்த மாணவன் ஒருநாள் மறுத்துள்ளார். இதனால் மாணவனை பிரம்பால் ஆசிரியர் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் தனது பெற்றோரிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், பள்ளி ஆசிரியரிடம் கேட்டனர். அதற்கு ஆசிரியர் முறையான பதில் அளிக்காமல் அவர்களை விரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பள்ளி ஆசிரியர் குறித்து துண்டு பிரசுரம் அச்சடித்து வினியோகம் செய்தனர். எனவே மேலும் ஆத்திரம் அடைந்த முருகன், மாணவனை மிரட்டி குண்டர்களை வைத்து அவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன மாணவன் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்தார். இதுகுறித்து மாணவனின் தாய் மகுடீஸ்வரி சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications