காதல் தோல்வியில் கொசு மருந்தை குடித்த சகோதரிகள்: தங்கை மரணம், அக்கா கவலைக்கிடம்
சென்னை: சென்னையில் காதல் தோல்வியால் சகோதரிகள் இருவர் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டதில் தங்கை பலியானார். அக்காவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாதவரம் முனுசாமி நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள்கள் திவ்யா (16), கீர்த்திகா(11). திவ்யா பிளஸ்-2 படிக்கும் அதே பள்ளியில் கீர்த்திகா 6-ம் வகுப்பு படித்துவந்தார்.
பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது திவ்யாவுக்கு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வார்கள். இந்த காதல் விவகாரம் கீர்த்திகாவுக்கும் தெரியும்.
இந்நிலையில் திவ்யா காதலித்து வந்த இளைஞர் ஹைதராபாத் சென்று விட்டார். திவ்யாவுடன் செல்போனில் பேசுவதையும் அவர் நிறுத்திக்கொண்டார். இதனால் விரக்தியடைந்த திவ்யா தனது காதல் தோல்வி குறித்து தங்கையிடம் கூறினார். அதோடு தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.
அக்கா மீது கொண்ட பாசம் காரணமாக கீர்த்திகாவும் தற்கொலை செய்து கொள்ள முன்வந்தார். சனிக்கிழமை மாலையில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்தனர். அவர்களின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது திவ்யாவும் கீர்த்திகாவும் மூர்ச்சையாகிக் கிடந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் திவ்யாவை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையிலும், கீர்த்திகாவை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சேர்த்தனர். அன்று இரவே கீர்த்திகா உயிரிழந்தார். திவ்யாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவிகள் இருவர் காதல் தோல்வியில் விஷம் குடித்த சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications