கோவையில் என்சிசி முகாமில் கல்லூரி மாணவி பலி.. மூச்சுத்திணறி மயங்கி விழுந்து பரிதாபம்
கோவையில் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Recommended Video

கோவை: கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் என்.சி.சி. முகாமில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள வண்டிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகள் ஹரிபிரியா. இவர் கோவை அரசு கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் என்.சி.சி. முகாம் நடந்து வருகிறது. தேசிய அளவில் நடைபெற்று வரும் இந்த முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த முகாமில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில், தங்கள் கல்லூரி மாணவிகளுடன் ஹரிபிரியாவும் இந்த முகாமில் பங்கேற்றிருந்தார்.
நேற்று மாலை கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், ஹரிப்பிரியா அறைக்கு திரும்பியபோது திடீரென்று மூச்சு திணற ஆரம்பித்தது. இதனால் சற்று நேரத்திற்கெல்லாம் ஹரிப்பிரியா மயங்கி சரிந்து விழுந்தார். இதனை கண்ட அங்கிருந்த மாணவிகள் என்சிசி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து ஹரிப்பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஹரிப்பிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தங்களுடன் சற்று முன்னர்வரை விழாவில் பங்கேற்று சிரித்து பேசிக் கொண்டிருந்த ஹரிப்பிரியா, திடீரென உயிரிழந்ததை தாங்க முடியாமல் சக மாணவிகள் கதறி அழுதனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications