மெரீனா கடலில் மூழ்கி கல்லூரி மாணவி பரிதாப பலி – கரை ஒதுங்கியது உடல்
சென்னை: சென்னை மெரீனா கடலில் மூழ்கி கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி. இவரது நண்பர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக். இவர்கள் இருவரும் தண்டலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இயன்முறை மருத்துவம் படித்து வந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இருவரும் மெரீனா கடற்கரைக்கு வந்தனர். கடல் நீரில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கோடீஸ்வரி கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட அசோக், கோடீஸ்வரியை காப்பாற்ற கடலுக்குள் சென்றபோது, அவரும் அலையில் சிக்கிக் கொண்டார்.
இருவரும் அலையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த வேறு சிலர், இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால், அசோக்கை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. கோடீஸ்வரியை மீட்க முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மயங்கிய நிலையில் இருந்த அசோக்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கோடீஸ்வரியின் உடலை மீட்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் உழைப்பாளர் சிலை அருகே கோடீஸ்வரியின் உடல் கரை ஒதுங்கியது. உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கோடீஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications