ஆசிரியர் சில்மிஷத்தால் தீக்குளித்த விருதுநகர் பள்ளி மாணவி மரணம்
விருதுநகர்: ஆசிரியர் சில்மிஷத்தால் விருதுநகரில் தீக்குளித்த மாணவி உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஆண்டு அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரிந்த சந்திரசேகர் என்பவர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
மேலும் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் ஆசிரியரை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் அம்மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து ஆசிரியர் சந்திரசேகர் சில்மிஷம் செய்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சந்திரசேகரை கைது செய்தனர். அவர் மீது சிறுமி பலாத்காரம், பெண் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் சில்மிஷத்தால் மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications