ஆசிரியரின் சில்மிஷம் தாங்காமல் தீக்குளித்த மாணவி - மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஆசிரியர் சில்மிஷத்தால் மாணவி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்த, அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.
இதை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் ஆசிரியரை கண்டித்துள்ளனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்து ஆசிரியர் சந்திரசேகர் சில்மிஷம் செய்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் கெரசின் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சந்திரசேகரை கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications