கடலூரில் பயங்கரம் - கல்லூரி வாசலிலேயே மாணவி படுகொலை
கடலூர்: கடலூரில் உள்ள பிரபல புனித ஜோசப் கல்லூரியில் படித்து வந்த மகாலட்சுமி என்ற மாணவி, கல்லூரி வாசலிலேயே கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரைக் கொலை செய்த நபர் தப்பி விட்டார். கல்லூரி வாசலில் கொலை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பு படித்து வந்தவர் மகாலட்சுமி. இவர் வழக்கம்போல் கல்லூரி வகுப்பு முடிந்து இன்று மதியம் வெளியே வந்துள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த ஒரு நபர் மாணவியை நெருங்கி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் மகாலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை செய்த நபர் தப்பி விட்டார். அவர் மகாலட்சுமியின் உறவினர் என்று கருதப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications