ஆசிரியர்- மாணவர் உறவு.. இவ்வளவுதான் சூட்சுமம்.. புரிந்துகொண்டால், அதுதான் மாபெரும் மாற்றம்!
பள்ளி ஆசிரியரின் பணிமாறுதலை ரத்து செய்ய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

அரக்கோணம்: தமிழகத்தில் பல்வேறு கலவரம், பிரச்சனைகளுக்கு நடுவே கல்வித்துறையில் ஒரு நல்ல மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. குறிப்பாக ஆசிரியர்-மாணவர் உறவுகளில் நடைபெற்று வரும் இந்த மாற்றம் ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம் எனலாம்.
அரக்கோணத்தை அடுத்துள்ள பகுதி சேந்தமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி. இங்கு தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் விஜயா. இவருக்கு வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தங்கள் ஆசிரியர் விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என பள்ளி முன்பு உட்கார்ந்து இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே ஆசிரியர் பகவான் விஷயத்திலும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்போது அதே பாதையில் ஆசிரியர் விஜயாவும் தடம் பதித்துள்ளார். அதற்கு காரணம் ஆசிரியர் விஜயாவின் அணுகுமுறைதான் என சொல்லப்படுகிறது. ஆசிரியர்-மாணவர் நல்லுறவு என்பது ஏதோ சிக்கலான விஷயமோ, அரிதாக நடைபெறும் நிகழ்வோ கிடையாது.
ஆசிரியர் பகவானை உங்களுக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மாணவர்கள் அளித்த பதில், ''அன்பா பேசுவாரு, எளிமையா பாடம் நடத்துவாரு, எங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும்'' என்பதுதான்.
அதேபோல, மாணவர்கள் உங்கள் மேல் இவ்வளவு பிரியமாக இருக்க என்ன காரணம் என ஆசிரியர் பகவானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், "என்னை நம்பி குழந்தைகள் அவர்களின் சந்தோஷங்களையும், பிரச்சனைகளையும் பகிர்ந்துகொள்வார்கள்" என்றார்.
இவ்வளவுதான் சூட்சுமம். இவ்வளவுதான் சாராம்சம். இதை புரிந்துகொண்டால், கல்வித்துறையில் அதுதான் மிகப்பெரிய மாற்றம்... அதுதான் மறுமலர்ச்சி.. அதுதான் சீர்திருத்தம்... ஆனால் மாணவர்கள் இப்படி தங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்காக போராட துவங்கிவிடுவதால் கடைசியில் இக்கட்டான, தர்மசங்கட நிலை பள்ளி கல்வித்துறைக்குதான் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளிகல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்குமோ?
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications