மாணவி பலாத்காரம்: நெல்லை பாதிரியாருக்கு ஜன.9 வரை சிறை

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கைலாசபுரத்தைச் சேர்ந்தவர், செல்வன் (வயது 34). இவர் நெல்லை பேட்டையில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பாதிரியாராக இருந்து வந்தார்.
அந்த ஆலயத்துக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர் வந்தார். ஆசைவார்த்தைகள் கூறி அந்த மாணவியை, பாதிரியார் செல்வன் பலாத்காரம் செய்துள்ளார். மாணவியை மிரட்டி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார்.
5 மாத கர்ப்பிணியாக இருந்த போது, ஒரு பெண் டாக்டரின் மூலம் மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து சிசு அகற்றப்பட்டது. இந்த விவகாரம் வெளியே தெரியத்தொடங்கியதும் பாதிரியார் செல்வன் தலைமறைவானார்.
நெல்லை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியாரை தேடி வந்தனர். அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சிசுவானது, பேட்டையில் ஒதுக்குப்புறமான பெட்டைகுளம் பகுதியில் புதைக்கப்பட்டது. அதை தோண்டி சோதனை மேற்கொள்ளப்பட்டது. கருவிலேயே அகற்றப்பட்டது ஆண் குழந்தை என தெரியவந்தது.
சிசுவின் சடலத்திலிருந்து மருத்துவக் குழுவினர் மாதிரிகளை எடுத்த பின்னர், மீண்டும் அதே இடத்தில் சடலம் புதைக்கப்பட்டது.
இது தொடர்பாக திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து பாதிரியார் செல்வின், மருத்துவர் மீனாட்சி ஆகியோரைத் தேடி வந்தனர்.
இந்தநிலையில், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடுவர் கீதா முன்னிலையில் பாதிரியார் செல்வன் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். அவரை வியாழக்கிழமை வரை சிறைக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி கீதா, 26-ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள தொடர்புடைய நீதிமன்றத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார், நீதிமன்ற உத்தரவுப்படி, திருநெல்வேலி குற்றவியல் மாஜிஸ்திரேட் 5வது கோர்ட்டில் இன்று போலீசார் அவரை ஆஜர்படுத்தினர்.
பாதிரியார் செல்வத்தை விசாரித்த நீதிபதி இசக்கியப்பன் அவரை வருகிற ஜனவரி மாதம் 9 ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து பாதிரியார் செல்வம் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாதிரியார் செல்வனை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாதிரியார் செல்வனை காண்பதற்கு ஏராளமானவர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர்.
பள்ளி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியாரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தோலிக்க சபையில் இருந்து நீக்கி பிஷப் அறிக்கை வெளியிட்டார். இவ்வழக்கில் நீதி நிலைநாட்டப்படும். இதுதொடர்பாக நேர்மையான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு திருச்சபையின் தரப்பிலிருந்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications