மாணவி பாலியல் பலாத்காரம்: தனியார் டி.வி. ஊழியர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சேத்துப்பட்டில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தனியார் டி.வி. ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் கௌதமன் (28). இவர் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் உதவி கேமிராமேனாக வேலை செய்து வருகிறார்.
கௌதமனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர், சேத்துப்பட்டு எம்.எஸ். நகரில் வசிக்கும் 11-ம் வகுப்பு மாணவியான தனது அக்காள் மகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் கௌதமனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications