For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் தொடங்கி அர்பன் நக்சல் வரை.. பல நாட்களாக தொடர்ந்து போராடி வந்த சோபியா!

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆன #பாசிசபாஜக_ஆட்சிஒழிக!

    சென்னை: பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியா ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    .நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டனர். அவரின் இந்த கோஷம் தற்போது வைரல் ஆகியுள்ளது.

    அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. சோபியா என்ற பெயரும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே இப்படித்தான்

    ஏற்கனவே இப்படித்தான்

    சோபியா தற்போது திடீர் என்று தமிழசையை பார்த்தவுடன் பாஜக ஒழிக என்று கோஷமிடவில்லை. அவர் இதற்கு முன்பில் இருந்தே மத்திய பாஜக அரசுக்கும், மாநில அதிமுக அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார். அவர் டிவிட்டர் பக்கம் முழுக்க பாஜகவிற்கு எதிராக நிறைய டிவிட்டுகள் காணப்படுகிறது.

    தூத்துக்குடி போராட்டம்

    அவர் டிவிட்டர் பக்கத்தில் இருக்கும் முதல் டிவிட்டே, (பின் செய்து வைத்துள்ளார்) தூதுக்குடிட் போராட்டம் குறித்துதான். தூத்துக்குடி போராட்டம் பற்றியும், ஸ்டெர்லைட் போராட்டம் பற்றியும், வேதாந்தா குழுமம் தூத்துக்குடியில் என்ன செய்கிறது என்றும் விளக்கம் அளிக்கும் கட்டுரை ஒன்றை பகிர்ந்து வைத்துள்ளார். அதேபோல் தூத்துக்குடி தொடர்பாக நிறைய டிவிட்டுகளை செய்துள்ளார்.

    செயற்பாட்டாளர்கள் கைது

    செயற்பாட்டாளர்கள் கைது

    அதேபோல் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக, 60 வயது தாண்டிய ஒரு பெண் உட்பட 5 சமூக செயற்பட்டர்களை கைது செய்தது. தற்போது இவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாஜக இவர்களை அர்பன் நக்சல் (நகர்ப்புற நக்சல்) என்று அழைக்கிறது. இவர்களின் விடுதலைக்காக தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து இவர் டிவிட் செய்துள்ளார்.

    கடைசியில் கைது

    கடைசியில் கைது

    அதேபோல் திருமுருகன் காந்தியின் கைதுக்கு எதிராகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். மேலும் வளர்மதி கைது குறித்தும் தொடர்ந்து எழுதியுள்ளார். சமூக செயற்பட்டாளர் கைதுக்கு எதிராக பேசி வந்த சோபியா தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Student Sophia have been protesting against BJP and AIADMK from long back.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X