திருவண்ணாமலையில் ஏரியில் விழுந்த 2 மாணவிகள் பலி
திருவாண்ணாமலையில் உள்ள ஏரி ஒன்றில் விழுந்து 2 மாணவிகள் பலி ஆகியுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவாண்ணாமலையில் உள்ள ஏரி ஒன்றில் விழுந்து 2 மாணவிகள் பலி ஆகியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த இராமாபுரம் கிராமத்திலிருந்து மேலப்பூண்டிக்கு செல்லும் வழியில் பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. இந்த ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

நிரம்பி வழியும் இந்த ஏரியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சங்கீதவாணி (12) ரூபிணி (12) ஆகியோர் தவறி விழுந்தனர். மேலும் இவர்கள் 500 மீட்டர் தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூலம் இறந்து போன அவர்கள் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவர்களுடன் சென்ற சங்கீதவாணி சகோதரர் மகேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.












Click it and Unblock the Notifications