பழசுக்கு புதுசு.. தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கு ரூபாய் நோட்டு விளக்க கூட்டம்
தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பழைய ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அரசு செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களை பெறுவது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் விளக்க கூட்டம் நடைபெற்றது.
பள்ளி மாணவர் விஜய் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி புதிய ரூபாய் 500,1000 ...எப்படி பெறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கி சொன்னதுடன் இது தொடர்பான முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்ட தகவல்கள் அடங்கிய நோட்டிசும் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.

பணம் மாற்றும் படிவம் வேண்டுவோர் பள்ளியில் வந்து பெற்று கொள்ளலாம் எனவும் எடுத்து சொல்லப்பட்டது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லும் என்கிற தகவலும், ஆனால் அதனை வங்கியில் தான் கொண்டு சென்று மாற்ற இயலும் என்கிற தகவலும் தெளிவாக பெற்றோர்களிடம் சென்று சொல்ல வேண்டும்.

வீட்டை சுற்றி உள்ள அனைவரிடமும் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற தகவல்களை ஆசிரியர் ஸ்ரீதர் எடுத்து சொன்னார். நிறைவாக மாணவி அல்நிஸ்மா பேகம் நன்றி கூறினார்.

"அனைவரும் ஏதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்"
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய கல்வி நாள் விழாவில் அனைவரும் ஏதாவது விவசாயம் செய்யுங்கள் என்று தனியார் விவசாயக் கல்லூரி டீன் பேபி ராணி பேசினார்.

விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். தனியார் விவாசய கல்லூரி டீன் பேபி ராணி தலைமை தாங்கி பேசுகையில், அனைத்து மாணவர்களும் சிறு வயது முதலே வீட்டை சுற்றிலும் சிறிய அளவிலாவது விவசாயம் செய்யுங்கள்.
இன்று பருவமழை பொய்த்து போனதாலும், பெருவாரியான நிலங்கள் விலை நிலங்களாக மாறி விட்டதாலும், கூட்டு குடும்பங்கள் குறைந்து விட்டதாலும் ,உழைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் விவசாயம் செய்வோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனவே நீங்கள் உங்கள் பெற்றோரிடம் சொல்லி பசு மாடு வளர்த்தால் கூட அது விவசாயம்தான்.

ஏதாவது ஒரு வகையில் விவசாயம் செய்யுங்கள்.மாணவர்களாகிய நீங்கள் சிறு வயது முதலே அந்த பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.கிடைக்கும் அனைத்து தகவல்களையும் படித்து கொள்ளுங்கள். கல்விதான் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்துள்ள மிகபெரிய சொத்து.கல்வியோடு தொடர்பு படுத்தி இயற்கை விவசாயத்தை அதிக படுத்துங்கள் என்று பேசினார்.

மாணவர்கள் ஜீவா, காவியா, சின்னமாள், பரமேஸ்வரி, ரஞ்சித், தனலெட்சுமி, ராஜேஷ் ஆகியோர் விவசாயம் தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications