மழை மன்னன்... புயல் புலி... லீவ் தெய்வம்... ரமணனை கொண்டாடும் மாணவர்கள்
சென்னை: தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரமணனுக்கு கோயில் கட்டிக் கொண்டாடத குறை. ஏதோ ரமணனே திட்டமிட்டு வடகிழக்கு பருவ மழையைத் தூண்டிவிட்டது போல, அவருக்கு நன்றி கூறி மீம்ஸ் போட்டு பாலபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குட்டீஸ்களுக்கு மட்டுமல்ல... மழையால் விடுமுறை விடப்பட்டதோடு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படவே, கல்லூரி மாணவர்களுக்கும் கதாநாயகன் ரமணன்தான்.
மதியம் 12.30 ஆகிவிட்டாலே அது டிவியில் ரமணன் வரும் நேரம் என்பதை தெரிந்து கொண்டு டிவி சேனலை பார்க்க ஆரம்பித்து விட்டனர் மாணவர்கள். இன்னைக்கு ஸ்கூல் லீவாமே 'குலதெய்வம்' அருள்வாக்கு சொல்லிருச்சு என்று ரமணனை கொண்டாடுகிறார்கள். அந்த அளவிற்கு ரமணன், ஃபேவரைட் ஹீரோ ஆகிவிட்டார். அதனால்தான் மீம்ஸ் போட்டு கலக்குகின்றனர்.
வானிலை அறிக்கை கூறி தமிழக மக்களின் மனதை மகிழ்விக்கும் ரமணன் அனைத்து டிவி சேனல்களிலும் ஹீரோவாகி அரைமணி நேர எபிசோடை பல ஆண்டுகளாக தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
எத்தனையோ பேர் என்னைப் பார்த்தாலும் எங்க வீட்டில் என்னை டிவியில் பார்க்கவே மாட்டார்கள் என்று வருத்தப்படுகிறார் ரமணன். ஏன் அவருடைய பேட்டியை அவரே பார்க்க மாட்டாராம்.
|
பிடித்த நடிகை யார் தெரியுமா?
ரமணன் சாருக்கு பிடித்த நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியாம். அவருடைய குரலுக்கு இன்றைக்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அது இயற்கையிலயே தனித்துவமாக எனக்கு அமைந்தது என்கிறார் ரமணன்.

இன்னும் 2 ஆண்டுதான்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக பல ஆண்டுகாலம் டிவியில் தோன்றி வானிலை முன்னறிவிப்பு சொல்லும் ரமணன் இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டும்தான் பணியில் இருப்பாரம். அப்புறம் ரிட்டையர்மெண்ட்தான் என்கிறார்.

டாக்டர் ரமணன்
விவேகானந்த கல்லூரியில் இயற்பியல் படித்து அண்ணா யுனிவர்சிட்டியில் எம்.எஸ்.சி படித்து மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறாராம் ரமணன்.
|
நான் ரொம்ப சாமான்யன்
எனக்கு மீம்ஸ் போட்டு பாராட்டுவது அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. நான் என்னுடைய வேலையை செய்கிறேன். நான் சாதாரண அரசாங்க ஊழியன். ரொம்ப சாமான்யன் என்கிறார் இந்த மழை மன்னன்.
|
இது சராசரி மழைதான்
இது வழக்கமாக பெய்யக் கூடிய வடகிழக்கு பருவ மழைதான். இதுக்கு முன்னாடி பல தடவை சென்னையில இவ்வளவு மழை
பெய்திருக்கிறது. சென்னையில மட்டும் 51 செ.மீட்டர் மழை பெய்து இருக்கிறது. மற்ற மாவட்டத்தை பொறுத்தவரை காஞ்சிபுரத்தில் அதிக அளவு மழை பெய்திருக்கிறது என்கிறார் சாதாரணமாக கூறிவிட்டு இன்றைய வானிலை அறிக்கைக்கு தயாராகிவிட்டார் ரமணன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications