7 தமிழரை விடுதலை செய்யக் கோரி மார்ச் 3-ல் வகுப்பு புறக்கணிப்பு - மாணவர் கூட்டமைப்பு
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மார்ச் 3-ம் தேதி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், பிரபாகர், ஜோ பிரிட்டோ, செம்பியன், இளையராஜா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையிலும், இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களிடம் தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவோரை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமையன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே அரசியல் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பின்னர் மார்ச் 3-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மாணவர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications