வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்.. தியாகிகள் நினைவிடத்தில் மாணவர்கள் மரியாதை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினத்தையொட்டி மாணவர்கள் தியாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி கோவில்பட்டி அருகே கடலையூரில் வெயிலுகாத்த முதலியார் தலைமையில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகள் மீது ஆங்கிலேயே அரசு துப்பாக்கி சூடு நடத்தியதில் சங்கரலிங்க முதலியார் சம்பவ இடத்திலேயே பலியானார். மாடசாமி முதலியார், ராமசாமி முதலியார் ஆகியோர் குண்டடி பட்டு படுகாயம் அடைந்தனர்.
ஏராளமானோர் சிறையில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். காலஞ்சென்ற இந்த தியாகிகளின் தேசப்பற்றை போற்றும் விதமாக கோவில்பட்டி அருகே கடலையூரில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 74-வது ஆண்டு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அங்குள்ள செங்குந்தூர் உயர்நிலைப்பபள்ளி மாணவ, மாணவிகள் தியாகிகளின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து கடலையூர் முக்கிய வீதிகளில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில கோவில்பட்டி ஆர்டிஓ கண்ணபிரான், டிஎஸ்பி முருகவேல், கல்வி மாவட்ட அலுவலர் செல்லையா ஆகியோரும் பங்கேற்றனர். தியாகிகளின் வாழ்க்கையை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications