பஸ் கட்டண குறைப்பை நிராகரித்த மாணவர்கள்.. ஓயாத தொடர் போராட்டம்!
தமிழக அரசின் பஸ் கட்டண குறைப்பை நிராகரித்து கல்லுரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு: தமிழக அரசின் பஸ் கட்டண குறைப்பை நிராகரித்து கல்லுரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. 60 சதவீதத்துக்கும் மேலான கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு நேற்று குறைத்து அறிவித்தது.

திருப்தியளிக்கவில்லை
ஆனாலும் கட்டண குறைப்பு மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. பல இடங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பல இடங்களில் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வகுப்பு புறக்கணிப்பு
இந்நிலையில் கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி கட்டணத்தை விட
கல்லூரி கட்டணத்தை விட பேருந்து கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். பஸ் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

போராட்டம் தொடரும்
இதேபோல் நாகர்கோவிலிலும் இந்து கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications