தம்பிகளா, இதுதான் துப்பாக்கி... மாணவர்களுக்கு "டெமோ" காட்டிய சென்னை போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காவல் நிலையங்களின் அன்றாட செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காவல் நிலையங்களை சுற்றிப் பார்க்கும் ஒரு விசிட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கும் மாணாக்கர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு காவல் நிலையங்களில் தினசரி நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து விளக்கப்பட்டது.

கொரட்டூர் காவல் நிலையத்திற்கும் இதேபோல மாணவர்கள் வருகை தந்தனர். அவர்களை காவல்துறையினர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று காவல்துறையினரின் பணி குறித்து விளக்கினர்.

சிறார் உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து போலீஸார் விளக்கிக் கூறினர்.

மேலும் போலீஸார் பயன்படுத்தும் துப்பாக்கி குறித்தும் மாணவர்களிடம் விளக்கப்பட்டது.

Students visit Chennai police stations

குற்றச் செயல்களைத் தடுக்க காவல்துறை எப்படி செயல்படுகிறது, திருடர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகள், திருட்டுக்கள், சட்டவிரோத செயல்களைத் தடுப்பது எப்படி, விழிப்புணர்வுடன் செயல்படுவது எப்படி. புகார் தருவது எப்படி, அவசர உதவிக்கு யாரை நாட வேண்டும் என்பது குறித்தும் காவல்துறையினர் விளக்கிக் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+