சேலம்: சீட்டு விளையாடிய பணத்தை ஆட்டையைப் போட்ட சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சேலம்: சேலத்தில் சீட்டு விளையாடிய போது ஒன்றரை லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தலைமறைவான போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் கிச்சிப்பாளையம் திருமண மண்டபத்தில் சிலர் சீட்டு விளையாடினர். இவர்களுடன் சேலம் டவுன் குற்றப்பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் சீனிவாசனும் சீட்டு விளையாடியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சேலம் டவுன் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் இந்த திருமண மண்டபத்திற்கு வந்து விசாரித்தனர்.
போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்து இருப்பதை அறிந்த சப்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சீட்டு ஆடியவர்கள் வைத்து இருந்த ரொக்கப்பணம் ஒன்றரை லட்சத்தை எடுத்துகொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி பொதுமக்கள் சிலர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதை விசாரிக்க சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதன் பேரில் துணை கமிஷனர் பாபு தலைமையிலான போலீசார் விசாரித்து 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அப்போது இவர்கள் சீட்டு விளையாட வைத்து இருந்த ரொக்கப்பணத்தை சப்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் எடுத்து சென்று விட்டார். இந்த தொகையை வாங்கி தாருங்கள் என புகார் செய்தனர்.
இதன் பேரில் தற்போது விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் சப்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சேலம் சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.நேற்று இரவு இவர் திடீரென ‘சஸ்பெண்டு' செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சேலம் போலீஸ் கமிஷனரும், சேலம் சரக டி.ஐ.ஜியுமான அமல்ராஜ் பிறப்பித்துள்ளார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications