போலி பத்திரப் பதிவு செய்த வழக்கில் நீலாங்கரை சார் பதிவாளர் தாமு அதிரடி கைது
போலியாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக நீலாங்கரை சார் பதிவாளர் தாமு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: போலியாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக நீலாங்கரை சார் பதிவாளர் தாமு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் 48 மணிநேரத்தில் கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்ட நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த சக்திகுமார் என்பவர் தன்னுடைய குடும்ப சொத்துகளை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவரது சகோதரி சாவித்திரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த போது, போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலி பத்திரபதிவுக்கு நீலாங்கரை சார்பதிவாளர் தாமு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சார் பதிவாளர் தாமு மற்றும் போலி பத்திரபதிவுக்கு உடந்தையாக இருந்த நபர்களை 48 மணி நேரத்திற்குள் கைது செய்யும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் தாமுவை போலீசார் இன்று கைதுசெய்துள்ளனர். தாமுவிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிவரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு திருவான்மியூரை சேர்ந்த சுமிதா (40) என்பவருக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள தந்தையின் சொத்துகளை போலி ஆவணங்கள் தயாரித்து சுமிதாவின் தாயும், சகோதரனும் அபகரித்துள்ளனர். இதற்கும் நீலாங்கரை சார்பதிவாளர் தாமு உடந்தையாக இருந்தது உள்பட பல புகார்கள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications