சினிமா நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவராகி வருகிறது: சு.சாமி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது -சுப்பிரமணியன் சாமி - பரபர பேட்டி- வீடியோ

    தூத்துக்குடி: சினிமா நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகிக் கொண்டிருக்கிறது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளனர். அடுத்ததாக விஷாலும் தனிக் கட்சி துவங்கும் யோசனையில் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி வந்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    காவிரி நீர்

    காவிரி நீர்

    தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமானால் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். ஆனால் காவிரி நீர் கிடைக்காது. சும்மா நாடகம் ஆடுகிறார்கள். கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கொடுக்கலாம். இது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தெரியாதா?

    கடற்கரை

    கடற்கரை

    என்னிடம் தீர்வு கேட்டால் இஸ்ரேலில் இருந்து எந்திரத்தை வரவழைத்து கடற்கரையில் வைத்தால் நீர் பிரச்சனையே இருக்காது. இந்த திட்டத்தை 4 மாதங்களில் செயல்படுத்த முடியும்.

    எம்.பி.க்கள்

    எம்.பி.க்கள்

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்துவிட்டதாக நினைத்தால் 40 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் அது குறித்து பேச வேண்டும். அவர்கள் எல்லாம் டெல்லியில் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

    ப. சிதம்பரம்

    ப. சிதம்பரம்

    டிடிவி தினகரனின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் துணிச்சலாக போட்டியிட்டு வென்றுள்ளார். அவரின் வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி ப. சிதம்பரம் குறை கூறுகிறார். அவர் மீதான வழக்கில் அவர் விரைவில் சிறைக்கு செல்லப் போகிறார்.

    2ஜி மேல்முறையீடு

    2ஜி மேல்முறையீடு

    சினிமா நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆகிக் கொண்டிருக்கிறது. எனக்கு பதவி ஆசை இல்லை. 2ஜி வழக்கில் 10 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்படுகிறது என்றார் சாமி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+