முதுகெலும்பில்லாத, சுயதம்பட்ட முட்டாள்... கமல்ஹாசனைத் திட்டும் "பொர்க்கி" சாமி!
சமீப காலமாக அரசியல் அரங்கில் அனல் கிளப்பி வரும் ஒரே நடிகரான கமல் ஹாஸனை 'பொர்க்கி' புகழ் சுப்பிரமணிய சாமி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
குறைந்தபட்ச அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் கமல் ஹாஸனை, 'முதுகெலும்பில்லாத முட்டாள்' என்று ட்விட்டரில் திட்டியுள்ளார் சுப்பிரமணிய சாமி.

ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில் தமிழர்களை 'பொறுக்கிகள்' எனத் தொடர்ந்து திட்டி வந்தார் சு சாமி. இதைக் கண்டித்து ட்விட் போட்டிருந்தார் கமல் ஹாஸன். பதிலுக்கு கமல் ஹாஸனையும் 'பொர்க்கி' என்று குறிப்பிட்டார் சாமி. இதற்கு பதிலளித்த கமல், 'சாமியின் கேவலமான பதிவுகளுக்கு பதில் தர விரும்பவில்லை. காமராஜ், அண்ணா & ராஜாஜி எல்லாம் நீ சொன்ன 'பொர்க்கி' இனத்தில் இணையற்ற தலைவர்கள். மோதி மிதித்துவிடு பாப்பா..' என்று கூறியிருந்தார்.
இப்போது மீண்டும் கமலை வம்புக்கு இழுத்துள்ளார் சு சாமி. அவரது ட்விட்டரில் ஒருவர், "எப்படியாவது கமல் ஹாஸனை சமாதானப்படுத்தி பாஜகவில் இணைத்துவிடுங்கள். அவரைப் போன்ற ஒருவர் அக்கட்சிக்குத் தேவை", என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சு சாமி, "எனக்கு பாஜக பற்றி எதுவும் தெரியாது. ஆனால் கமல் ஹாஸன் என்ற முதுகெலும்பில்லாத கோழையை, சுயதம்பட்ட முட்டாளை கடுமையாக எதிர்க்கிறேன்," என்று கூறியுள்ளார்.
சு சாமியின் இந்த பதில் கட்சி பேதம் தாண்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications