அண்ணாசாலையை அடுத்து ஓ.எம்.ஆர், சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து நெரிசலால் அவதி
சென்னை பெருங்குடி சுங்கச்சாவடி அருகே ஓ.எம்.ஆர் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: பெருங்குடி சுங்கச்சாவடி அருகே இன்று 8 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. எப்போதுமே போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் மேலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக காணப்பட்டது.
சென்னை நகரில் அண்ணா சாலையில், மயிலாப்பூரில் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது. பஸ், கார் கவிழும் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த முறை பழைய மகாபலிபுரம் சாலையில் 4 அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கவே, தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார் உடனடியாக போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அத்துடன், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்ததில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் டிராக்டர் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு பள்ளம் மூடப்பட்டது. திடீர் பள்ளம் காரணமாக சாலையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications