நெல்லையில் திடீர் மழை: மனம் குளிர்ந்த மக்கள்
நெல்லை: நெல்லையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென புதன்கிழமை மாலை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 3ம் தேதி முதல் வெயில் அவ்வப்போது சதமடித்து வருகிறது. இதனால் பகலில் மட்டுமின்றி இரவிலும் புழுக்கத்தால் மக்கள் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இந்த நிலை மாலை வரை நீடித்தது. இதனால் சூட்டின் தாக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. பின் மாலை 6 மணிக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் ஓரளவு தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லையில் மாலை மழைக்கு முன்பு வெயில் 95 டிகிரி ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் வரும் மே 4ம் தேதி கத்தரி வெயில் ஆரம்பமாக உள்ளது. இது மே மாதம் 29ம் தேதி வரை நீடிக்கிறது. அந்த 26 நாட்களும் கோடை வெயில் உச்சநிலையை அடையும். இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகபட்சமாக 110 டிகிரியை கடந்து வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி வெயிலை நினைத்து மக்கள் தற்போதே பயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications