சுள்ளென்று அடித்த வெயில் ஓடியது.. ஜில்லென்ற மழையில் நனைந்தது சென்னை!
சென்னை: சென்னையில் இன்று காலை நேரத்தில் பெய்த திடீர்மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
தமிழ்நாட்டில், வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் சிறிய அளவில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனாலும் நேற்று காலை முதலே வெயில் கொளுத்தியது. அனல் காற்றும் வீசியது. மாலை நேரத்தில் வானிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது குளிர்ந்த காற்றும் வீசியது.

இந்தநிலையில் மயிலாப்பூர், மந்தைவெளி, கோபாலபுரம், உள்ளிட்ட இடங்களில் சாரலாக தொடங்கிய மழையின் வேகம் அதிகரித்தது. இதனையடுத்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. மேலும் சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையாறு ஆகிய இடங்களிலும் சாரல் மழை பெய்தது. நகரின் பலஇடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
நேற்றுவரை கொளுத்திய வெயிலுக்கு திடீரென பெய்த மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவது இதமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரைப் போலவே புறநகரான தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்துள்ளது. தொடர்ந்து மேகமூட்டமாக உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications