வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சூர்யா நகரை தத்தெடுத்த சுஹாசினி- மணிரத்னம்
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சூர்யா நகரை சுஹாசினி - மணிரத்னம் தம்பதியர் தத்தெடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் சில வாரங்களாக கொட்டித் தீர்த்த மழை சென்னை மற்றும் கடலூர் மக்களின் வாழ்வாதரங்களை மொத்தமாக அழித்துச் சென்று விட்டது.

மக்கள் மழை, வெள்ளம் பாதிப்பிலிருந்து மீண்டுவர தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நல்ல உள்ளம் படைத்த பலர் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
Distribution at surya nagar kottur ..naam woman aandal distributes even though she lost evrything except her auto pic.twitter.com/AeYxXyRyqa
— Suhasini Maniratnam (@hasinimani) December 13, 2015 மேலும் நடிக, நடிகையரும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு சுஹாசினி - மணிரத்னம் தம்பதியர் தங்களால் முடிந்த பல்வேறு உதவிகளை வழங்கி வந்தனர்.
Rajkumar and gopi at dustribution surya nagar kottur for naam foundation pic.twitter.com/E9I2DITHbN
— Suhasini Maniratnam (@hasinimani) December 13, 2015 உணவு, உடைகள், மருந்துப்பொருட்கள், குடிநீர், பால் பவுடர், பெண்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை இத்தம்பதியர் ஏற்கனவே மக்களுக்கு வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை கோட்டூர்புரம் சூர்யா நகரை சுஹாசினி - மணிரத்னம் தம்பதியர் தத்தெடுத்து உள்ளனர்.

நாம் இயக்கம் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து முதல்கட்டமாக அந்தப் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி இருக்கின்றனர்.

மேலும் மருத்துவ உதவிகள் உட்பட தேவைப்படும் உதவிகளை தொடர்ந்து வழங்கிட இருவரும் முடிவு செய்திருக்கின்றனர்.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications