Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் போறவங்களுக்கு ஸ்பெஷல் ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை விடுமுறை எப்போது வரும் சொந்த ஊருக்கு போகலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறீர்களா? ரயில்களில் இடம் கிடைக்குமோ? கிடைக்காதோ என்ற கவலை வேண்டாம். திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Summer special trains

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (வழி: திண்டுக்கல், கரூர், நாமக்கல்)

ரயில் எண் 06028: ஏப்ரல் 1 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

ரயில் எண் 06029: ஏப்ரல் 2 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

நிற்கும் இடங்கள்

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில்

ரயில் எண் 06030: ஏப்ரல் 4 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில்

ரயில் எண் 06031: சென்னை எழும்பூரில் இருந்து ஏப். 5 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ரயில் எண் 06032: ஏப்ரல் 29 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்.

திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில்

ரயில் எண் 06033: ஏப்ரல் 1 மற்றும் 29 ஆம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

ரயில் எண் 06034: ஏப்ரல் 2 மற்றும் 30 ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

நிற்கும் இடங்கள்

இந்த ரயில் கொல்லம், காயங்குளம், செங்கநூர், திருவலா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிற்கும்.

எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்

ரயில் எண் 06035: ஏப்ரல் 9 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

ரயில் எண் 06036: ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நிற்கும்.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில்

ரயில் எண் 06038: ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 18) முதல் தொடங்குகிறது.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரயில்

ரயில் எண் 00610: ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ரயில் எண் 00611: ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ரயில் எண் 00612: ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நிற்கும்.

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் பிரீமியம் அதிவிரைவு ரயில்

ரயில் எண் 00613: ஏப்ரல் 5 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த ரயில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ரயில் நிலையங்களில் நிற்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+