எப்.எம். ரேடியா உரிம ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பு.. மத்திய அரசு அடுத்த 'செக்'
டெல்லி : சன் குழுமம் அடுத்தக்கட்ட பண்பலை வானொலி உரிம ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
உள்துறை அமைச்சகத்திடமிருந்து உரிய பாதுகாப்பு அனுமதி பெறவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதியதாக பண்பலை வானொலி உரிமங்களை வழங்குவதற்காக மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் சட்டம், தொலைத் தொடர்புத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 3 வது கட்டமாக பண்பலை வானொலிகளுக்கான உரிமம் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் சன் குழுமம் உட்பட மூன்று நிறுவனங்கள் ஏலத்தில் பங்கு பெற அனுமதி மறுக்கப்பட்டது. இரண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தொழில் நுட்ப காரணங்களை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்ட நிலையில், சன் குமுமத்தின் விண்ணப்பம் பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன்குழுமத்தின் தொலைகாட்சிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அனுமதி மறுத்துள்ளதை சுட்டிக்காட்டி எப்.எம் ரேடியோவிற்கான ஏலத்தில் பங்கு பெற அந்நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறத. சன் குழுமம் சார்பில் ஏற்கனவே நாடெங்கிலும் 45 எப்.எம் வானொலிக்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications