நீங்க அப்பா செல்லமா... அப்ப உடனே ஒரு வீடியோ எடுத்து சன் மியூசிக்குக்கு அனுப்பலாமே!
சென்னை: இதோ தந்தையர் தினம் வந்து விட்டது. இந்த தந்தையர் தினத்தை கொண்டாடி மகிழ, தந்தையர்களை அன்பால் திக்குமுக்காட வைக்க மகள்களும், மகன்களும் போட்டி போட்டு மூளையைக் கசிக்கிப் பிழிந்து பிளான் செய்து கொண்டுள்ளனர்.
உலக நாடுகளில் பெருமளவில் கொண்டாடப்படும் தினங்கள் எல்லாம் இப்போது இந்தியாவிலும் கொண்டாடப்பட ஆரம்பித்து விட்டது. காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் இப்போது யோகா தினம் வரை வந்து விட்டார்கள்.
Send a Video Of Ur Dad and U to make this Father's Day a memorable one.Remember to watch de same in Sun Music on 21/6 pic.twitter.com/rAU6kzsYw6
— sunmusic (@SunMusic) June 16, 2015 இந்த நிலையில் ஜூன் 21ம் தேதி தந்தையர் தினமாகும். இதையொட்டி தந்தையர்களைக் கொண்டாடி, கெளரவித்து அன்பு செலுத்த பிள்ளைகள் கிளம்பி விட்டார்கள்.
தந்தையர் தினத்தை சன் குழுமத்தின் சன் மியூசிக் சானல் வித்தியாசமாக கொண்டாடப் போகிறது. இதற்காக நேயர்களுக்கு அது ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
உங்க அப்பா ஏன் உங்களுக்கு ஹீரோ என்பதுதான் அந்தப் போட்டியின் தலைப்பு. இதில் பங்கேற்போர் தங்களது தந்தை குறித்த வீடியோவைத் தயாரித்து அதை சன் மியூசிக்குக்கு அனுப்பி வைக்கலாம். உங்களது தந்தையிடம் உங்களுக்குப் பிடித்தவை என்ன என்பதை அதில் சொல்லாம்.
இந்த வீடியோவை சன் மியூசிக்கின் 9940678522 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறப்பான வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு அவை தந்தையர் தினத்தன்று சன் மியூசிக் சானலில் ஒளிபரப்பப்படும்.
பிறகென்ன, அப்பாக்கள் பெற்ற மகள்களே மற்றும் மகன்களே, கேமராவை கையில் எடுத்து தடபுடலாக வீடியோ எடுத்து அனுப்பி வைக்க வேண்டியதுதானே...!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications