பச்சமுத்துவுக்கு எதிராக "யுத்தமே நடத்திய" சன் குழுமம்
சென்னை: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்து மீதான மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நாள் முதல் விசாரணையின் ஒவ்வொரு நகர்வையும் தொடர்ந்து தமது குழும ஊடகங்களில் வெளியிட்டு யுத்தத்தையே நடத்தி வந்தது சன் டிவி குழுமம். இதற்கு எதிராக பச்சமுத்துவும் தமக்கு சொந்தமான புதிய தலைமுறை டிவியில் சன் குழுமத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுப் பார்த்தார்.. ஆனால் இப்போது பச்சமுத்து கைது செய்யப்பட்டதில் சன் குழும ஊடகங்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதை அதன் ஊடகப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.
டிவி சேனல்களைப் பொறுத்தவரையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோலோச்சிக் கொண்டிருந்தது சன் குழுமம்தான்.. அதன் 24 மணிநேர சன் நியூஸ் செய்திகள் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தன... அப்போது சன் குழுமம் தம்முடைய எஸ்.சி.வி. நிறுவனம் மூலமாக கேபிள் டிவி ஒளிபரப்பையும் தம் வசமே வைத்திருந்தது.

இந்த நிலையில்தான் புதிய தலைமுறை 24 மணிநேர தொலைக்காட்சியை எஸ்.ஆர்.எம். குழுமம் தொடங்கியது. அதுவும் சன் நியூஸ் சேனலில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள், டெக்னீஷியன்களை பல மடங்கு ஊதியம் கொடுத்து புதிய தலைமுறை டிவியை தொடங்கினார் பச்சமுத்து. ஆனால் சன் குழுமம் தமது எஸ்.சி.வி. மூலம் புதிய தலைமுறை டிவிக்கு குடைச்சல் கொடுத்து வந்தது.
இந்த இரு டிவி சேனல்களுக்கும் இடையேயான அக்கப்போர் செய்திகளாகவும் வந்தன. அதுமுதலே சன் குழுமம்- பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம். குழுமம் இடையேயான மோதல் தொடங்கிவிட்டது. எஸ்.ஆர்.எம். குழும நிறுவனங்களின் மீதான புகார் செய்திகளுக்கு சன் குழும ஊடகங்கள் முக்கியத்தும் கொடுக்கும்; இதற்கு பதிலடியாக சன் குழுமங்களின் மீதான புகார்கள், வழக்குகளுக்கு புதிய தலைமுறை முக்கியத்துவம் கொடுத்து இடைவிடாமல் ஒளிபரப்பின.
இந்நிலையில் வேந்தர் மூவிஸ் மதன் மாயமாகிவிட பச்சமுத்து மீது மோசடி புகார்கள் குவிந்தன. இந்த புகார்கள் குறித்தும் இது தொடர்பான வழக்குகள் குறித்தும் இடைவிடாமல் சன் குழும ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.
இதற்கு எதிராக பச்சமுத்து பகிரங்கமாக அறிக்கைகளை புதிய தலைமுறை டிவியில் வெளியிட்டுப் பார்த்தார்; சன் குழுமங்களின் மீதான வழக்குகளையும் திரும்ப திரும்ப ஒளிபரப்பிப் பார்த்தார்...
தற்போது க்ளைமாக்ஸ் காட்சியாக பச்சமுத்துவை போலீசார் கைது செய்துவிட்டனர்... இதற்குதானே ஆசைப்பட்டது சன்குழுமம் என்பதை போல ஹேப்பி அண்ணாச்சியாக பச்சமுத்து கைது; பச்சமுத்து கைது தொடர்பான கருத்துகள் என அடித்து விளையாடுகிறது சன் குழும ஊடகங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications