கண்ணா ட்ரெயின்ல பார்த்து பத்திரம்மா போ... ரயில்வே ஸ்டேஷனில் ‘ரஜினி’ குரல்!
சென்னை: ரயில் பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குரலில் மிமிக்ரி செய்யப்பட்டு ரயில் நிலையங்களில் ஒலிபரப்பு செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
‘தலைவா நீ ஆணையிடு தட்டாது தமிழ்நாடு' என ரஜினியிடம் வாக்குறுதி கொடுத்துள்ளனர் அவரது ரசிகர்கள். பொதுவாக நமது நாட்டில் சினிமாவிற்கென்று தனி மவுசு உள்ளது. மற்ற பிரபலங்கள் கூறுவதைக் காட்டிலும் சினிமா நட்சத்திரங்கள் கூறும் கருத்துக்கள் எளிதாக, விரைவாக மக்களைச் சென்றடைந்து விடுகிறது.

திரை நட்சத்திரங்களின் இந்த மந்திர சக்தியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் அரசாங்கம், பல விழிப்புணர்வுத் தகவல்களை அவர்கள் வாயிலாக மக்களுக்குக் கொண்டு செல்கிறது.
அந்தவகையில், சூப்பர்ஸ்டார் ரஜினியின் குரலை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்.
என் வழி தனி வழி...
ரயில் பயணங்களில் பாதுகாப்பாக இருக்க பயணிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கூறி வருகிறது ரயில்வே நிர்வாகம். ஏதோ அறிவிப்பு என அதனை எடுத்துக் கொள்ளாமல் மக்கள் கவனமுடன் அதைக் கவனிக்க புது ஐடியா செய்துள்ளது.
நான் ஒருவாட்டி சொன்னா....
அதாவது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குரலில் ரயில் பயணத்தில் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைத் தகவல்கள் ரயில் நிலையங்களில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.
சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா...
சாதாரண கம்யூட்டர் வாய்சாக இல்லாமல் சூப்பர்ஸ்டார் பேசுவது போல் மிமிக்ரி கலைஞரை வைத்து இந்த எச்சரிக்கைத் தகவல்கள் பதிவு செய்யப் பட இருப்பதால் மக்கள் ஆர்வமுடன் அதை விரும்பிக் கேட்பர் என நம்புகிறது ரயில்வே நிர்வாகம்.
ரஜினி ஒரு தடவைச் சொன்னா...
கூடிய விரைவில் ரயில் நிலையங்களில் ரஜினி வாய்ஸைக் கேட்கலாம் எனத் தெரிகிறது. ரஜினி பேச்சைக் கேட்டாவது நம்ம பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications