For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அனைத்து தரப்பினருடன் சுமுக உறவை மேற்கொள்ள விரும்புகிறேன்- சூரப்பா

தமிழகத்தில் அனைத்து தரப்பினருடன் சுமுக உறவை மேற்கொள்ள விரும்புகிறேன் என்றார் சூரப்பா.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் தொடர்ந்து நியமிக்கப்படும் வெளிமாநில துணைவேந்தர்கள்

    சென்னை: தமிழகத்தில் அனைத்து தரப்பினருடன் சுமூக உறவை மேற்கொள்ள விரும்புவதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளாக காலியாக உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலைில் கன்னடரான சூரப்பாவை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    Surappa says that he wants to go easy relationship with all

    காவிரி விவகாரம் நடைபெற்று வரும் நிலையில் சூரப்பாவை துணைவேந்தராக நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து தனியார் தொலைகாட்சி சேனலுக்கு சூரப்பா கூறுகையில் எனக்கு மொழி ஒரு பிரச்னை இல்லை.

    தமிழ் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வேறு மாநிலங்களில் பணியாற்றியபோதும் அந்த மாநில மொழியை அறிந்து செயல்பட்டேன்.

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக அடுத்தவாரம் பொறுப்பேற்க உள்ளேன். எனது நியமனம் குறித்து அரசியல் விமர்சனம் செய்வது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றார் சூரப்பா.

    English summary
    Anna University Vice Chancellor Surappa says that he wants to go easy relationship with all.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X