'நொய்யலை மீட்போம்'' ... அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்த சூர்யா
கோயமுத்தூர்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து, வற்றிய நதிகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா.
பிஸியான நடிகர் என்றாலும் சமூகப் பணிகளுக்கு நேரம் ஒதுக்க சூர்யா எப்போதும் தயங்கியதில்லை. தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு சூர்யா உதவிவருகிறார்.
மே மாதம் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அது தொடர்பான குறும்படங்களிலும் சூர்யா நடித்துக் கொடுத்திருக்கிறார்.

கோவையின் ஜீவ நதியான நொய்யலை மீட்க 'நொய்யலை நோக்கி' என்ற பெயரில் நதி புனரமைப்புத் திட்டத்தை, தன்னார்வ அமைப்புகள் தொடங்கியுள்ளன
நேற்று 'நொய்யலை நோக்கி' திட்டத்தின் துவக்க விழா கோவையில் நடைபெற்றது. அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் சூர்யா "3 மாதங்களுக்கு முன் மழை பெய்தாலும் தற்போது தண்ணீர் இன்றி தவித்து வருகிறோம். இந்த நிலையை மாற்ற நொய்யல் நதியை மீட்க வேண்டும்.
நதியை தொடக்கத்திலிருந்து புணரமைத்துச் செல்ல 4 மாவட்டங்களைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புடன் இணைந்து இளைஞர்கள், பொதுமக்கள் இங்கு முன்வந்துள்ளனர்.
இந்த நதியை மீட்டெடுத்து காவிரியுடன் கலக்க வைக்க முடியும். நம்மால் இதனை செய்ய முடிந்தால் இது இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணமாக அமையும்" என்று பேசினார்.
நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ள 68 நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், நொய்யல் நதியில் விடப்பட்டு ஆராதனைகள் செய்யப்பட்டன.
இறுதியாக, ‘நொய்யல் நதியை மீட்டெடுத்துக் காப்போம்' என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications