எஸ்வி சேகர் தலைமறைவாகி இன்றோடு எத்தனை நாள் என்று தெரியுமா?
எஸ்வி சேகர் தலைமறைவாகி இன்றோடு 48 நாட்கள் ஆகின்றன.
Recommended Video

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் தலைமறைவாகி இன்றோடு 48 நாட்கள் ஆகின்றன.
ஆளுநர் பன்வாரிலால் கடந்த மே மாதம் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் அந்த பெண் பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவரான எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். பெண் பத்திரிக்கையாளரை இழிவாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார் எஸ்வி சேகர்.

எஸ்வி சேகருக்கு எதிர்ப்பு
அவரது அந்த அநாகரீகமான பதிவுக்கு பெண் பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டையும் பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கைது செய்ய தடையில்லை
இதைத்தொடர்நது எஸ்வி சேகர் மீது பல்வேறு இடங்களில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் எஸ்வி சேகரை கைது செய்ய தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது.

கைவிரித்த சுப்ரீம் கோர்ட்
இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்வி சேகர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் தரமுடியாது என கைவிரித்தது.

ஜாலியாக உலா வரும்
இதைத்தொடர்ந்து எஸ்வி சேகர் எந்நேரத்திலும் கைதாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. பொது நிகழ்ச்சிகளில் ஜாலியாக உலா வரும் எஸ்வி சேகர், போலீசார் கையில் மட்டும் சிக்காமல் உள்ளார்.

48 நாட்கள்
இன்றோடு 48 நாட்கள் ஆகிவிட்டது எஸ்வி சேகர் தலைமறைவாகி. இன்னும் போலீசார் எஸ்வி சேகரை கைது செய்யவில்லை. அதற்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவரது உறவினர் என்பதே காரணம் என்றும் குற்றச்சாட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications