வைரமுத்து மனம் காயப்பட்டால் என்ன? படாவிட்டால் என்ன? - இது எஸ்வி சேகர்!
வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகிகளில் ஒருவருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகிகளில் ஒருவருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து மேற்கோள் காட்டிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தன்மீதான சர்ச்சை குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார். அதில் தான் மேற்கோள் காட்டியது தவறாக சித்தரிக்கப்பட்டு திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூச்சையுற்று கிடக்கிறது
இதனால் தனது மனம் உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் தனக்குள் ஒலித்துக்கொண்டிருந்த தமிழ்க்குயில் கடந்த 10 நாட்களாக மூச்சையுற்று கிடப்பதாகவும் உருக்கமாக வீடியோவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்கவில்லை
இந்நிலையில் அவரது உருக்கமான வீடியோ குறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். வைரமுத்து தான் கூறிய தவறான கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என எஸ்வி சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

காயம்பட்டால் என்ன?
தான் கூறியது சரிதான் என முட்டாள்தனமாக வைரமுத்து பேசுவதாகவும் எஸ்வி சேகர் சாடியுள்ளார். வைரமுத்துவின் மனம் காயம்பட்டால் என்ன படாவிட்டால் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடிப்படை தமிழ்கூட தெரியவில்லை
வைரமுத்து காசுக்காக என்ன வேண்டுமானலும் எழுதுவார் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்தார். அடிப்படை தமிழ் கூட தெரியாமல் இருக்கிறார் வைரமுத்து என்றும் எஸ்விசேகர் தெரிவித்தார்.

விருது வாங்கவே வீடியோ
அரசிடம் விருது வாங்கும் முயற்சியாகவே வைரமுத்து இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். ஆண்டாள் பிரச்சனையில் வைரமுத்துவுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து பாஜகவினரும் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications