For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

பொள்ளாச்சி: "எல்லா வேலையையும் முடிச்சிட்டார் ரஜினி.. சீக்கிரம் அரசியலுக்கு வருவார்.. இதை கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி விரும்புவார்" என்று எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசியதில் இருந்தே பாஜக தரப்பு செம கடுப்பில் உள்ளனர். அதிலும் எச்.ராஜா ட்வீட் மேல ட்வீட் போட்டு சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இந்த விஷயம் குறித்து பேசாமல் இருந்த பிரமுகர்கள்கூட வரவேற்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதில் முக்கியமானவர் ரஜினிதான்!

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

பாஜகவின் ஆதரவாளராக பார்க்கப்படும் ரஜினி, சூர்யாவின் கருத்தை வரவேற்றதாக கூறினார். இது பாஜக தரப்பினருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு புறம் ரஜினி பாஜகவுக்கு எதிராக பேசுகிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அரசியல்

அரசியல்

இந்த சமயத்தில், ரஜினி என்றுமே எங்கள் பக்கம்தான் என்பதுபோல, எஸ்வி சேகர் ஒரு கருத்து சொல்லி உள்ளார். அதாவது அரசியலுக்கு வருகிறேன் என்று இத்தனை காலம் சொல்லி வரும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கிறேன்

எதிர்க்கிறேன்

பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் எஸ்வி சேகர் பேசியபோது, "புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர சூர்யா வலியுறுத்தி இருக்கவேண்டும். மாற்றத்துக்கு ஏற்ற கல்வியை படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழ்நாட்டின் கல்வி தரமே சீரழிந்துவிட்டது.

முக அழகிரி

முக அழகிரி

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை எல்லாம் முடித்து விட்டார். விரைவில் அரசியலுக்கு வருவார். இதனை கே.எஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் மு.க. அழகிரி விரும்புவார்" என்றார்.

அப்டேட்கள்

அப்டேட்கள்

ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் அப்டேட்கள் எஸ்வி சேகருக்கு எப்படி தெரியும் என்று தெரியவில்லை. அதே போல, முக அழகிரியை உள்ளே இழுத்து விட்டு கருத்து சொல்லி உள்ளதால், ரஜினி அரசியல் வருகை விஷயத்தில் பெரிய விவகாரம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளார்.

English summary
Actor S.Ve.Sekhar has said that even if KS Azhagiri does not like it, Rajinikanth will soon return to politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X