ஓமைகாட், எங்க ஊர் சுத்தமாக இல்லையா?: அதிர்ச்சியில் கோவை மக்கள்
சென்னை: மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள சுத்தமான நகரங்கள் பட்டியலில் கோவை பின் தங்கியுள்ளது அந்நகர மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 கிளாஸ்-1 நகரங்களில் சுத்தம் குறித்த ஆய்வை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. சுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பது, கழிவுநீர் சுத்திகரிப்பு, குடிநீரின் தரம், நீர் நிலைகளில் உள்ள தண்ணீரின் தரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் தென்னிந்திய மாநிலங்களின் நிலை பற்றிய விவரம் வருமாறு,

தமிழ்நாடு
மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னைக்கு 61வது இடம் கிடைத்துள்ளது. நாட்டிலேயே மைசூரை அடுத்தபடியாக சுத்தமான நகரம் திருச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, கோவை ஆகிய நகரங்கள் முதல் 200 இடத்திற்குள் வந்துள்ளன. புதுவை 23வது இடத்தில் உள்ளது.

கோவை
தமிழகத்தின் பெங்களூர் என்று அழைக்கப்படும் நகரம் கோவை. அப்படி இருக்கையில் அந்த நகரம் சுத்தமான நகரங்கள் பட்டியலில் பின்தங்கியுள்ளது அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா
இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் கர்நாடகத்தில் உள்ள 4 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. சுத்தமான தலைநகர் என்ற பெயரை பெங்களூர் தட்டிச் சென்றுள்ளது. நாட்டிலேயே சுத்தமான நகரமாக மைசூர் தேர்வாகியுள்ளது. ஹாஸன் மற்றும் மாண்டியா ஆகிய நகரங்கள் சுத்தமான நகரங்கள் பட்டியலில் 5 மற்றும் 6து இடத்தில் உள்ளன.

கேரளா
சுத்தமான நகரங்கள் பட்டியலில் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் 8வது இடத்தில் உள்ளது. மேலும் கோழிக்கோடு, கொச்சி ஆகிய நகரங்களும் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பெங்களூரை அடுத்தபடியாக சுத்தமான மாநில தலைநகர் என்ற பெயரை பெற்றுள்ளது திருவனந்தபுரம்.

தெலுங்கானா
மத்திய அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெலுங்கானாவில் உள்ள 11 நகரங்கள் மற்றும் ஆந்திராவில் உள்ள 30 நகரங்கள் கணக்கில் எடுக்கப்பட்டன. சுத்தமான நகரங்கள் பட்டியலில் தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் 50வது இடத்திலும், செகந்திராபாத் 191வது இடத்திலும், தலைநகர் ஹைதராபாத் 275வது இடத்திலும், நிஜாமாபாத் 82வது இடத்திலும் உள்ளன.

ஆந்திரா
சுத்தமான நகரங்கள் பட்டியலில் ஆந்திராவில் உள்ள 3 நகரங்கள் மட்டுமே முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன. விழியநகரம் 58வது இடத்தையும், நாசரத்பேட்டை 59வது இடத்தையும், குண்டூர் 70வது இடத்தையும், விசாகப்பட்டினம் 205வது இடத்தையும், விஜயவாடா 266வது இடத்தையும் பிடித்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications