Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா உடனடியாக சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவது தமிழகத்திற்கு நல்லது... சாமி அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுடன் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எனது ஆலோசனை என்னவென்றால் அவர் உடனடியாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா சுகவீனம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டி அதிமுகவினர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். கோவில் கோவிலாக, தர்கா, சர்ச்சுகள் என வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

Swamy asks Jayalalitha to go to Singapore for treatment

அதேபோல பல்வேறு கட்சித் தலைவர்களும் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர். அந்த வரிசையில் ஜெயலலிதாவின் பரம வைரியான, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்கக் காரணமானவரான சுப்பிரமணியம் சாமியும் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவீட்டில், எனது ஆலோசனை என்னவென்றால் உடனடியாக ஒரு விமானத்தை அமர்த்தி அவர் சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். நாம் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் அவர் நலமுடன், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் சாமி.

சுப்ரமணியம் சாமி தனது டிவிட்டுக்கு ஒருவர் அளித்த பதிலுக்கு பதில் கொடுக்கும்போது ஜெயலலிதா சிங்கப்பூர் சென்று பெறுவது அவருக்கு மட்டும் அல்ல தமிழக மக்களுக்கும் நல்லது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+