சசிகலா திங்கள்கிழமை முதல்வரானதும் முதல் வேலையா.. "பொர்க்கி" சாமியின் டிவீட்!

சசிகலா திங்கள்கிழமை முதல்வரானதும் முதல் வேலையாக பொர்க்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா திங்கள்கிழமை முதல்வராகப் பதவியேற்றால் முதலில் இந்த பொர்க்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி டிவீட் போட்டுள்ளார்.

தமிழர்கள் என்றால் பொர்க்கிகள்தான் சாமிக்கு. பால் அல்வா சாப்பிடுவது போல இந்த வார்த்தையை படு சந்தோஷமாக உச்ச்சரித்தும், எழுதியும் புளகாங்கிதப்படுவர் சாமி. பொர்க்கி என்பதையே நாகரீகமான வார்த்தையாக மாற்றி விட்டார் இந்த சாமி. இவரது டிவீட்டுகளில் தமிழர்களையும், போராட்டம் நடத்துவோரையும் பொர்க்கி, எலி என்று கேவலமாக விமர்சித்துப் போடாத நாள் இல்லை.

Swamy asks Sasikala to act on "Porkis"

இதை பலரும் அங்கேயே போய் சரியான பதிலடி கொடுத்தும் கூட சாமி உருப்பட்ட மாதிரி தெரியவில்லை. இன்னும் "பொர்க்கி"த்தனமாகவே எழுதியும், பேசியும் வருகிறார்.

இந்த நிலையில் இன்னொரு பொர்க்கி டிவீட் போட்டுள்ளார் சாமி. அதில், சசிகலா திங்கள்கிழமை முதல்வராகப் பதவியேற்றால் பொர்க்கிகள் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சசிகலா முதல்வர் ஆவாரா.. "பொர்க்கி"கள் மீது நடவடிக்கை எடுப்பாரா.. சாமியை சந்தோஷப்படுத்துவாரா.. பொறுத்திருந்து "பொர்க்குவோம்".. ஸாரி.. பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+