Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மோடி 'சுனாமி'யில் குப்பை, கூளமெல்லாம் ஜெயிக்கப் போகிறது- சொல்வது சு. சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உருவெடுத்துள்ள மோடி அலை எனும் சுனாமியில் குப்பை கூளங்கள் எல்லாம் ஜெயிக்கப் போகிறது என்று வயிற்றெரிச்சலை கொட்டியிருக்கிறார் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி.

ஜனதா கட்சி என்ற ஒருநபர் கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி சில மாதங்களுக்கு முன்பு திடீரென பாரதிய ஜனதாவில் இணைந்தார். ஆனாலும் அவரை தமிழக பாரதிய ஜனதா விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் கட்சியில் சேர்த்தனர் என்றே கூறப்பட்டது.

Swamy slams alliance leaders like as kachhra, kooda

இதனாலேயே சென்னை வந்தாலும் தமிழக பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் பக்கமே அவர் எட்டியும் பார்ப்பது இல்லை. மேலும் லோக்சபா தேர்தலுக்காக தமிழக பாஜகவின் கூட்டணி முயற்சிகளை மிகக் கடுமையாகவே விமர்சித்தும் வந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

குறிப்பாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கூட்டணியில் சேர்க்க சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதிலளித்த வைகோ, யார் அந்த சுப்பிரமணியன் சுவாமி? அவர் பாரதிய ஜனதாவில் இருக்கிறாரா? என்று கடுப்படித்தார்.

இந்த நிலையில் மீண்டும் தமிழக பாஜக தலைவர்களையும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் இன்று புதிய வம்புக்கு இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் " தமிழகத்தில் மோடி அலை சுனாமியாக உருவெடுத்துள்ளது. இந்த சுனாமியால் குப்பை கூளங்கள் எல்லாம் கூட ஜெயிக்கப் போகிறது.. மோடி பிரதமரான பின்னர் இவற்றையெல்லாம் சுத்தம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Modi wave in TN rising to a Tsunami and bring even kachhra and kooda to victory. Later we can clean up after he is sworn in as PM</p>— Subramanian Swamy (@Swamy39) <a href="https://twitter.com/Swamy39/statuses/446542160712585216">March 20, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

சுப்பிரமணியன் சுவாமி குப்பை, கூளம் எல்லாம் என யாரை குறிப்பிடுகிறார்? அதுவும் ராஜ்நாத்சிங்குடன் சென்னையில் கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது இப்படி வயிற்றெரிச்சலை கொட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+