சுவாதி கொலை: புழலில் அடையாள அணிவகுப்பு - ராம்குமார் வக்கீல் ஆட்சேபம்
சென்னை: இன்போசிஸ் நிறுவன மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார்தான் கொலையாளி என்பதை உறுதிப்படுத்த புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு இன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அடையாள அணிவகுப்பு குற்றவியல் சட்டத்துக்கு புறம்பானது என்று ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி மென் பொறியாளர் சுவாதி ,24 வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார்,24 கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராம்குமாரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்படுகிறது. போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். உடல்நிலை குணமானதால் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புழல் சிறையிலும் அங்குள்ள மருத்துவமனை பிளாக்கில் தனி அறையில் ராம்குமார் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் என்பதால் 24 மணி நேரமும் இரண்டு சிறை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டதால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு சிறை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்துடன் அவருக்கு ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு 4 நாட்கள் மேல் ஆகியும் பெற்றோர், உறவினர்கள் வந்து பார்க்கவில்லை. இதனால் அவர் பித்துபிடித்தவன் போல் இருப்பதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு வக்கீல் எஸ்.பி.ராம்ராஜ், புழல் சிறைக்கு சென்று ராம்குமாரை சந்தித்துப் பேசினார். ராம்குமாருக்காக வாதாடப்போகும் வழக்கறிஞர் நான்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராம்குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கே தவறானது. எனவே, ராம்குமாருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப் போவதில்லை. அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என்று நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
சுவாதி கொலை செய்யப்பட்ட போது, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கேண்டீனில் வேலை பார்க்கும் ஊழியர், தமிழ்ச்செல்வன் என்ற ஆசிரியர் மற்றும் சிலர் கொலையாளியை நேரில் பார்த்துள்ளனர். ராம்குமார்தான் கொலையாளியா என்பதை கொலையை நேரில் பார்த்தவர்கள் அடையாளம் காட்டுவதற்காக, இன்று புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அடையாள அணிவகுப்புக்குப் பின்னர் மீண்டும் ராம்குமார் சிறையில் அடைக்கப்படுவார். ராம்குமாரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வாக்குமூலம் பெறவும் நீதிமன்றத்தில் விரைவில் போலீசார் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த அடையாள அணிவகுப்பு குற்றவியல் சட்டத்துக்கு புறம்பானது என்று ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெயர் தெரியாமல் இருந்தால் மட்டுமே அடையாள அணிவகுப்பு நடத்துவது சரியாகும் என்றார். ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது எனவும் வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications