சுவாதி கொலையும்.. அதை விட பரபரப்பான ராம்குமாரின் முடிவும்.. ! #Ramkumar
சென்னை: "ஒரு சம்பவத்தை மறைக்க அதைவிட பெரிய சம்பவம் நடக்கணும்... நம்ம ஜனங்க அதைப் பத்தி பேச ஆரம்பிச்சிருவாங்க... அப்புறம் நாம செஞ்ச சம்பவம் மக்களுக்கு மறந்து போயிரும்" என்று அமைதிப்படையில் அசால்டாக சொல்வார் சத்யராஜ். அப்படித்தான் சுவாதி கொலை பரபரப்பாக ஒரு மாதம் பேசப்பட்டது.
ராம்குமார் கைதும் அதைத் தொடர்ந்து நடந்த பரபரப்புகளும் பேசப்பட்டன. ஒருதலைக்காதல் கொலைகள் தொடர்ந்து நடந்தாலும் கொலை செய்தவர்கள் உடனே தற்கொலை செய்து கொள்ளவே, அது சுவாதி கொலை அளவிற்கு ஊடகங்களில் பரபரப்பாகவில்லை.
காவிரி பிரச்சினை வந்ததும் எல்லாமே காணாமல் போனது. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டு ரெய்டு வரவே காவிரி மறக்கப்பட்டது. இதே சிறையில் ராம்குமார் மரணமடைய எல்லாமே மறந்து போய் மீண்டும் சுவாதி கொலை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இனி சுவாதி கொலைக்கு யார் காரணம் என்றோ ராம்குமாரின் மரணத்திற்கு என்ன காரணம் என்றோ யாரும் கேட்கப் போவதில்லை. ஏனென்றால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி அத்தனையும் அமுங்கி போய்விடும்.
சுவாதி கொலை நடந்த ஜூன் 24ம் தேதி முதல் ராம்குமார் மரணம் நடந்த செப்டம்பர் 18ம் தேதி நடந்த சம்பவங்களை தெரிந்து கொள்வோம் :

சுவாதி கொடூர கொலை
ஜூன் 24 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 6.40 மணியளவில் ஐடி நிறுவனத்திற்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த இளம்பெண் சுவாதி, அடையாளம் தெரியாத ஒரு நபரால் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தின் தலைநகரில் அதுவும் மக்கள் அதிகம் கூடும் ஒரு பகுதியில் நிகழ்ந்த இந்த கொலை, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

ரயில் நிலையத்தில் கொடூரம்
சுவாதி ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் இருந்தும் ஒருவர் கூட சுவாதியை கொன்ற கொலையாளியை தடுக்கவோ, போலீஸ் விசாரிக்கும் போது சரியாக அடையாளம் காட்ட முன்வரவில்லை.

சிசிடிவி காட்சிகள்
ஜூன் 27 ஆம் தேதி, இந்த கொலை வழக்கு, ரயில்வே காவல்துறையிடமிருந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதே நாளில், ஒரு சிசிடிவி வீடியோவை, காவல்துறை வெளியிட்டது. அதில் ஒரு இளைஞர் ரயில் நிலையத்தில் இருந்து குதித்து ஓடுவது பதிவாகியிருந்தது. இவர்தான் கொலையாளியாக இருக்கக்கூடும் என்று செய்திகள் வெளியானது.

ராம்குமார் கைது
ஜூலை 1ம் தேதி நள்ளிரவு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் ,22 என்ற இளைஞனை, சுவாதி வழக்கு தொடர்பாக காவலர்கள் கைது செய்தனர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்காக ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதாக போலீஸார் கூறினர். உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் ஆஜர்
ஜூலை 4, அதிகாலை 3 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் ராம்குமார் சென்னைக்கு 108 ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டார். அதே நாளில் எழும்பூர் பெருநகர மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புழல் சிறை
ஜூலை 5, மாலை 4 மணி அளவில் ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஜூலை 6, ஜாமீன் வேண்டி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமாரின் வழக்கறிஞர் பதிந்த ஜாமீன் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

போலீஸ் காவல்
ஜூலை 12, காலை 10. 30 மணி அளவில் நடந்த அடையாள அணிவகுப்பில், சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், ராம்குமாரை அடையாளம் காட்டினார். ஜூலை 13, ராம்குமாரை மூன்று நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க மாஜிஸ்ட்ரேட் அனுமதி தந்தார். நீதிமன்ற காவலில் இருந்து போலீஸ் காவலுக்கு சென்றார். ;மூன்று நாள் போலீஸ் காவலில் ராம்குமாரிடமும், சுவாதியின் நண்பர் பிலாலிடமும் போலீஸ் விசாரணை நடத்தியது. ஆகஸ்ட் 1ம் தேதி ராம்குமாரை சிறையில் நடித்துக்காட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மவுனம் கலைத்த ராம்குமார்
ஆகஸ்ட் 17ம் தேதி கையெழுத்து பரிசோதனைக்காக ராம்குமார் நேற்று மாலை 4 மணி அளவில், எழும்பூர் 14-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கோபிநாத் (பொறுப்பு) முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்குமாரிடம், உங்கள் கையெழுத்து மாதிரியை எடுத்து, பரிசோதனை நடக்க உள்ளது, அதற்கு சம்மதிக்கிறீர்களா? என்று மாஜிஸ்திரேட்டு கோபிநாத் கேட்டார். உடனே கையெழுத்து பரிசோதனைக்கு நான் சம்மதிக்கவில்லை என்று ராம்குமார் மறுத்தார். மேலும் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் முதன் முறையாக கூறினார்.

சிபிஐ விசாரிக்க மனு
ஆகஸ்டு 19, ராம்குமாரின் அம்மா புஷ்பம் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். செப்டம்பர் 2, சி.பி.ஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராம்குமார் மரணம்
செப்டம்பர் 18, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் ராம்குமாரை கொலை செய்து செய்து விட்டனர் என்று அவரது வழக்கறிஞரும், பெற்றோர்களும் கூறி வருகின்றனர்.

அறிக்கை சொல்வது என்ன
புழல் சிறையில் நேற்று மாலை 4.35 மணிக்கு ராம்குமாருக்கு மின்சாரம் தாக்கியதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மருத்துவ அறிக்கையில் ராம்குமார் கொண்டு வரப்பட்டபோதே மரணம் அடைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாலை 5.45 மணிக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications