Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிஷாவில் பாய்லின் புயலுடன் 12 மணிநேரம் போராடி கரை சேர்ந்த 18 தமிழக மீனவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒடிஷாவை பாய்லின் புயல் தாக்கியபோது கடலில் சிக்கிய 18 தமிழக மீனவர்கள் 12 மணிநேரம் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்துள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தூத்தூர், ஏழுதேசம் சின்னத் துறை, இரையுமன்துறை, மேல்பிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சேர்ந்த 18 தமிழக மீனவர்கள், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப் படகுகளில் கடந்த 22-09-2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

T.N. fishermen swim to safety

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் கோபால் பகுதியில் கரையை கடக்கவிருப்பதை அறிந்த மீனவர்கள் தங்களது இரு படகுகளுடன் 12-10-2013 அன்று கரை திரும்ப முயன்றுள்ளனர்.

மேற்படி கடும் புயலின் காரணமாக கடலின் சீற்றம் மற்றும் கடல் அலை அதிக உயரத்திற்கு எழுந்ததாலும், இவற்றுடன் பெருமழை பெய்ததாலும், மீன்பிடி விசைப் படகுகளில் கரை திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் இவர்களது படகிலிருந்த எரிபொருள் முழுவதும் தீர்ந்துவிட, தங்களையும் தங்களது படகுகளையும் காப்பாற்றிட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தகவல் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே முதல்- அமைச்சர் ஜெயலலிதா துரித நடவடிக்கை மேற்கொண்டு தலைமை செயலர், கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் ஆகியோருக்கு இந்திய கடலோர காவற்படை, கப்பற்படை மற்றும் ஒடிசா மாநில உயர் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு புயலில் சிக்கித் தவிக்கும் 18 மீனவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர் கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சென்னையிலுள்ள இந்திய கடலோர காவற்படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு நடுக்கடலில் புயலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் ஒடிசா மாநில சிறப்பு மீட்பு பணி ஆணையரையும், ஒடிசா மாநில மீன்வளத்துறை உயர் அலுவலர்களையும் தொடர்பு கொண்டு மீனவர்களை உடனடியாக மீட்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கடலோர காவற்படை, கொல்கத்தாவிலுள்ள கடலோர காவற்படையினரை தொடர்பு கொண்டு நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் உடனடியாக மீட்கவும் நடவடிக்கை மேற்கொண்டது.

ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே கரையை கடந்த பாய்லின் புயலின் சீற்றத்தில் மேற்படி மீனவர்களது படகு சேதமுற்று, அப்படகிலிருந்த 18 மீனவர்களும் ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஜகசன்பூர் மாவட்டத்தின் கடலோர குக்கிராமமான இராமத்துரா எனும் இடத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

இக்குக்கிராமமானது புயலின் தாக்கத்தால் தொலை தொடர்பு, போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகியவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், கரைசேர்ந்த மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி, உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இவ்விவரம் உடனடியாக ஒடிசா மாநில நிர்வாகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகமும் கடலோர காவற்படையும் இணைந்து மருத்துவ வசதிகளுடனான மீட்புகுழு அக்கிராமத்திற்கு விரைந்து சென்று 18 மீனவர்களுக்கும் அனைத்துவிதமான மருத்துவ உதவிகளை அளித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் உடைகளை வழங்கி அவர்களை பத்திரமாக மீட்டு மாவட்டத்தின் தலைமை இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கரை திரும்பிய மீனவரான ஹாஜி என்பவர் கூறுகையில், நடுக்கடலில் படகு மூழ்கிய நிலையில் 12 மணி நேரம் நீந்தி கரை சேர்ந்தோம். நாங்கள் மீனவ கிராமத்தை அடைந்த போது அங்கிருந்தோர் எங்களுக்கு ஆறுதலாக உதவி செய்தனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+